ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகிய “துணிவு” படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். போனி கபூர் தயாரித்திருக்கும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழக்தில் வெளியிட்டது.

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் இத்திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் அஜித்தின் அடுத்த திரைப்படத்தை இயக்கக்கூடிய டைரக்டர் விக்னேஷ் சிவன், துணிவு படத்தை பார்த்து ரசிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “திரையில் கிங்கை பார்ப்பது ரசிப்பது அலாதியானது. அனைத்து வகையிலும் துணிவு திரைப்படம் பிளாக் பஸ்டர். ஹெச்.வினோத் மற்றும் படக் குழுவினருக்கு வாழ்த்துகள்” என பதிவிட்டு தன் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.