தென்னிந்திய சினிமாவில் அம்மா வீடுகளில் நடித்து புகழ்பெற்றவர் ஜெயசுதா. இவர் கடந்த 1972-ம் ஆண்டு நடிக்க வந்துவிட்ட நிலையில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். இவர் தற்போது முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்த வரும் நிலையில் தமிழில் விஜய்க்கு அம்மாவாக வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு நடிகை ஜெயசுதாவுக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் நடந்துள்ளது. இவர் இரண்டாவதாக நிதின் கபூர் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் நடிகை ஜெயசுதா தற்போது மூன்றாவதாக திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படும் நிலையில் ஜெயசுதாவுக்கு தற்போது 64 வயது ஆகிறது. மேலும் ஜெயசுதா 64 வயதில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக அவர் தரப்பிலிருந்து எந்த ஒரு விளக்கமும் வரவில்லை.