GOAT படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட நடிகை ஸ்ரீ லீலா மறுத்துள்ளதாக வெளியாகி உள்ளது. தமிழில் தன்னுடைய அறிமுகம் ஒரு பாடலில் இருக்கக் கூடாது என அவர் நினைப்பதால், இந்த வாய்ப்பை நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அஜித்தின் குட் பேட் அக்லி என்ற படத்தில் ஹீரோயினியாக அவர் தமிழில் அறிமுகமாக உள்ளார். இவர் தெலுங்கில் மகேஷ்பாபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.