சமீபத்தில் வரலட்சுமி சரத்குமாரின் நிச்சயதார்த்தமானது நடந்து முடிந்தது. இவர் நிக்கேலாய்  என்பவரை திருமணம் செய்ய உள்ளார் . இதற்காக பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் அவருடைய வருங்கால கணவர் தோற்றத்தை குறித்து பலரும் கிண்டல் செய்தனர் .இதற்கு தற்போது அவர் பதிலடி கொடுத்துள்ளார்.  நடிகை வரலட்சுமிக்கு தற்போது 39 வயது ஆகி உள்ள நிலையில் இவர் 43  வயது காதலன் நிக்கேலாய் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தானவர்.

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். மற்றொரு பக்கம் விமர்சனங்களும் குவிந்து வந்தது. மேலும் வரலட்சுமி பணத்திற்காக திருமணம் செய்வதாக பேசி வருவதோடு அவருடைய வருங்கால கணவரின் தோற்றத்தையும் கிண்டல் செய்து வந்தனர் . இந்நிலையில் வருங்கால கணவரை தோற்றம்  செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக “என்னுடைய காதலர் என் பார்வைக்கு மிகவும் அழகானவர் “என்று பதிவிட்டுள்ளார். இது குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.