செய்தியாளரிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்,  எடப்பாடி யார் எங்களை நீக்குவதற்கு ? நான்  அம்மாவின் உரையாசிரியர்…. அம்மாவின் பத்திரிக்கைக்கு  ஆசிரியர்….. எடப்பாடி கையில் வைத்திருப்பது தான் ஏட்டுச் சுரக்காய்……  ஒரு கட்சிக்கான தலைவனை……. என் Wife-க்கு ஹஸ்பண்ட் யார் ? என்பதை என் சொந்த பந்தங்களும்,  என் உறவுகளும்,  நானும் தான் முடிவு செய்ய முடியும். நீதிமன்ற முடிவு செய்ய முடியுமா ?

அதுபோல ஒரு கட்சிக்கான தலைவன் யார் ? என்பதை மக்கள் மன்றமும்,  தொண்டனும் தான் தீர்மானிக்க முடியுமே தவிர,  நீதிமன்றங்களால் நிர்ப்பந்தம் செய்ய முடியாது. நீதிமன்றம் சொன்ன தீர்ப்புகளை…..   எங்களை பொறுத்தவரை தொண்டன் தான்  எங்களுடைய தீர்ப்பு, அதான் இறுதி தீர்ப்பு நீங்கள் இப்போது இந்த நாளை நினைத்து…. இந்த நாளின் பேரிலே போய் குறித்து  வைத்துக் கொள்ளுங்கள்….

என் தமிழ் மீது சத்தியமிட்டு சொல்கிறேன்…. 2024 தேர்தல் மே மாதம் முடிந்ததற்கு பிறகு,  எடப்பாடி இல்லாத அண்ணா திமுக உருவாக்கிவிடும்.  எடப்பாடி இல்லாத அண்ணா திமுக உருவாக்கி விடும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்… எடப்பாடி சீமானுக்குப் பிறகு மூன்றாவது,  நான்காவது இடத்திற்கு போவார். அவருக்கு ஓட்டு போடுவதற்கு தமிழ்நாட்டு மக்கள் தயாரில்லை என தெரிவித்தார்.