ஆம் ஆத்மி கட்சியின் அடையாளமாகப் பார்க்கப்பட்ட ராகவ் சத்தா, திடீரென அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தது இந்திய அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக ஆம் ஆத்மிக்காக உழைத்த ராகவ், “சரியான நபர் தவறான கட்சியில் இருந்துவிட்டேன்” என்று கூறி பாஜகவில் இணைந்தார்.

இவருடன் சேர்த்து ஆம் ஆத்மியின் 7 மாநிலங்களவை எம்பிக்களும் பாஜகவில் இணைந்துள்ளதால், அக்கட்சிக்கு மிகப்பெரிய பலவீனம் ஏற்பட்டுள்ளது. இந்த அதிரடி மாற்றத்திற்குப் பிரபல யூடியூபர் துருவ் ரதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “ராகவ் சத்தா போன்ற ஒரு பெரிய துரோகியை நான் பார்த்ததே இல்லை.

 

 

View this post on Instagram

 

A post shared by Dhruv Rathee (@dhruvrathee)

இவ்வளவு நாள் சமூக வலைதளங்களில் மக்களை ஏமாற்றிவிட்டு, இப்போது பயத்தினால் பாஜகவில் சேர்ந்துள்ளார்” என்று சாடியுள்ளார். மேலும், ராகவ் சத்தா முன்பு பாஜகவை கடுமையாக விமர்சித்த பழைய வீடியோக்களையும் துருவ் ரதி பகிர்ந்துள்ளார்.

பாஜகவில் இணைந்த 24 மணி நேரத்திற்குள் ராகவ் சத்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்கள் குறைந்துள்ளனர். அவரது மனைவி நடிகை பரிநீதி சோப்ரா இதுவரை இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்றாலும், ராகவ் சத்தாவின் இந்த முடிவு ‘பயத்தினால் எடுக்கப்பட்டதா அல்லது பேராசையினால் எடுக்கப்பட்டதா?’ என அரசியல் அரங்கில் அனல் பறக்கும் விவாதங்கள் நடந்து வருகின்றன.