உத்தரப் பிரதேச மாநிலத்தில் , பானிபூரி  தொடர்பாக ஏற்பட்ட சிறு தகராறு, நள்ளிரவில் கடைக்குத் தீ வைக்கும் அளவிற்கு முற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லக்னோ –  ஸ்வீட்ஸ்’ கடைக்குச் சொகுசு காரில் வந்த சில இளைஞர்கள், பானி பூரி சாப்பிட்டுவிட்டு கூடுதல் பப்படம் கேட்டபோது கடைக்காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது ஆயுதங்களைக் காட்டி மிரட்டிச் சென்ற அந்தக்கும்பல், ஆத்திரம் தீராமல் நள்ளிரவு 1:45 மணியளவில் மீண்டும் வந்து கடை மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துள்ளது. இந்த பயங்கரச் சம்பவத்தின் போது 3 முதல் 4 சுற்று துப்பாக்கிச் சூடு சத்தமும் கேட்டதாகக் கூறப்படுவதால் அப்பகுதி மக்களிடையே கடும் பீதி நிலவுகிறது.

“>

இந்தக் கொடூரச் செயல் அனைத்தும் கடையில் இருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது. பெட்ரோல் ஊற்றித் தீ வைக்கப்பட்டதில் கடைக்கு மிகப் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட கடைக்காரர் விவேக் குமார் அளித்த புகாரின் பேரில், மாட்டி காவல் நிலையப் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு தலைமறைவாக உள்ள சமூக விரோதிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.