சண்டிகரில் ‘நிஷு வ்லாக்ஸ்’ என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் வீடியோக்களைப் பதிவிட்டு வரும் பெண் ரேபிடோ ஓட்டுநர் ஒருவருக்கு நேர்ந்த கொடுமை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த கார் ஓட்டுநரை அந்தப் பெண் தட்டிக் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர், அந்தப் பெண்ணை அசிங்கமாகப் பேசியதுடன், காரை விட்டு இறங்கி வந்து பளார் என அந்தப் பெண்ணின் கன்னத்தில் அறைந்துள்ளார். இந்தத் தாக்குதலில் அந்தப் பெண்ணின் பைக்கில் இருந்த கேமரா நிலைகுலைந்து ஆடுவதை வீடியோவில் காண முடிகிறது.
View this post on Instagram
அங்கிருந்த பொதுமக்கள் அந்த டிரைவரைப் பிடித்துக் கீழே தள்ளிக் கேள்வி கேட்டபோது, அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதுகுறித்து வீடியோ வெளியிட்ட அந்தப் பெண், “அவர் குடிபோதையில் இருந்தார், எந்தக் காரணமும் இல்லாமல் என்னைத் தாக்கினார்” எனக் கூறி கதறி அழுதது பார்ப்பவர்களின் மனதை உருக்கியது.
இதுதொடர்பாக சண்டிகர் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெண் ஓட்டுநர்களின் பாதுகாப்பு குறித்துப் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
