
செய்தியர்களிடம் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, எனக்கு NCW ஜனவரி மாதம் பதவி முடிவானது. நான் ஏப்ரல் மாதம் பொறுப்பேத்துகிட்டேன். 4 மாதத்திற்கு அப்புறம் தான் நான் பதவி எடுத்துள்ளேன். அதற்கு நடுவுலஎன்னால் பூந்துகிட்டு, நீங்க என்ன ஆக்சன் எடுத்திருக்கீங்க என என்னால கேட்க முடியாது. NCW போலீஸ் கிடையாது.
இன்னொரு இன்வெஸ்டிகேஷன் போய்கிட்டு இருக்கும்போது…. அந்த இன்வெஸ்டிகேஷன் எப்படி போய்ட்டு இருக்குன்னா….. நான் பப்ளிக்கா சொல்லணும்னு அவசியமே கிடையாது. திரிஷா விஷயத்தில் ஒரு சீரியசான விஷயம்ன்னு நீங்க நினைக்கிறீங்களா? முடிஞ்சு போன விஷயம் தான்…. அன்னைக்கே சொன்னேன்.
இவர் ஒரு வார்த்தை சாரி தெரியாம சொல்லிட்டாருன்னு வேலை முடிந்து இருக்கும்… மன்சூர் அலிகான் தான் இழுத்து இருக்கிறார். பெரிய விஷயமே கிடையாது அது. எல்லாரும் பேசும் போது ஏதோ வார்த்தை தவறாக காமெடியா சொவிடுவோம். சொன்ன விதம் வேற, சொல்ல கூடிய நினைப்பு வேற… மைண்ட்ல என்ன நினைப்பு ஓடுதோ, அதை சொல்லக்கூடிய விஷயம் வேற… சும்மா தேவை இல்லாத பிரச்சனையை பெரிதாகி இருக்கிறது. வீம்புக்கு அவுங்க பண்ணுனதால பிரச்சனையை பெரிதாகி இருக்கிறது என தெரிவித்தார்.