நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடந்த சூப்பர் 8 சுற்றுப் போட்டி, தற்போது மேட்ச் ஃபிக்சிங் புகாரில் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போட்டியில் இலங்கை வீரர்கள் மிக மோசமாகப் பந்துவீசியதும், எளிதான கேட்ச்களைக் கோட்டை விட்டதும் ரசிகர்களிடையே பலத்த சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

குறிப்பாக, பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெற வேண்டும் என்பதற்காகவே இலங்கை அணி விட்டுக் கொடுத்ததாக சமூக வலைதளங்களில் ‘மேட்ச் ஃபிக்சிங்’ என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

இதில் உச்சகட்டமாக, இந்திய முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா இந்தப் போட்டி குறித்துத் தவறான தகவல்களைப் பரப்பியதாகச் சிலர் வம்புக்கு இழுக்க, அவர் உடனடியாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

“தவறான செய்திகளைப் பரப்பாதீர்கள்” என்று கறாராகக் கூறியுள்ள அவர், இது போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் விளையாட்டின் நேர்மையைக் குலைக்கும் என்று கொந்தளித்துள்ளார். ஐசிசி இந்த விவகாரத்தைக் கையில் எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு தற்போது எகிறியுள்ளது.