நடப்பு டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான வாழ்வா-சாவா போட்டியில் இலங்கை அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து வெளியேறிய நிலையில், அந்த அணியின் ஜாம்பவான் லசித் மலிங்கா மற்றும் கேப்டன் தசுன் ஷனகா இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
213 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணிக்கு, கேப்டன் ஷனகா 31 பந்துகளில் 76 ரன்கள் விளாசி கடைசி வரை வெற்றிக்காகப் போராடினார்.
View this post on Instagram
கடைசி 2 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டபோது, ஷாஹீன் அப்ரிடி வீசிய பந்துகளைச் சரியாகக் கணிக்கத் தவறியதால் இலங்கை தோல்வியைத் தழுவியது. இதனால் ஆத்திரமடைந்த மலிங்கா, போட்டி முடிந்த பிறகு டிரெஸ்ஸிங் ரூமிலேயே ஷனகாவை சரமாரியாகக் கண்டித்துள்ளார்.
ஷனகா ஏதோ விளக்கம் சொல்ல முயன்றபோதும், மலிங்கா எதையும் காதில் வாங்காமல் மிகக் கோபமாகப் பேசிய காட்சிகள் கேமராவில் பதிவாகியுள்ளன.
சொந்த மண்ணில் உலகக்கோப்பையை விட்டு வெளியேறிய சோகத்தில் இருந்த இலங்கை ரசிகர்களுக்கு, இந்த ‘உள்நாட்டுப் போர்’ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
