மகாராஷ்டிராவில் மொழி தொடர்பான சர்ச்சை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது மும்பை உள்ளூர் ரயிலில் இரண்டு பெண்களுக்கு இடையே நடந்த மொழி வாக்குவாதம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதில் ஒரு பெண் குழந்தையுடன் இருக்கிறார். அவர் தனது கையில் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து மராத்தி தெரியாத மற்றொரு பெண்ணிடம் மாநிலத்தில் மராத்தி பேச வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

இதனால் வாக்குவாதம் தொடங்கியது. இதற்கு மற்றொரு பெண் மறுப்பு தெரிவித்தார். பொது இடங்களில் மொழியை திணிப்பது தவறு என்று கூறினார். இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும் தனது கைகளில் செல்போனை எடுத்துக்கொண்டு வீடியோவாக பதிவு செய்ய தொடங்கினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.