மத்திய பிரதேசம் மாநிலம் சத்னாவில் ஒருவர் திருடியதாக நினைத்து மாவட்ட மருத்துவமனை அருகே மற்றொருவர் சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஒருவர் குச்சியால் நீல நிறம் உடை அணிந்த நபரை சரமாரியாக தாக்குகிறார். வலி தாங்க முடியாத அவர் தனது கைகளால் மறைத்தும் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதனை அங்கிருந்தவர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கின்றனர்.

 

ஆனால் அவரிடம் திருடப்பட்ட பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை, அவரிடம் இருந்ததெல்லாம் இரண்டு உலர்ந்த ரொட்டிகள் மற்றும் ஒரு சிறிய பாக்கெட் உப்பு மட்டுமே. இதுதான் அவரது அன்றைய ஒரே உணவு என்று கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.