ஆந்திரப் பிரதேசம் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம் சரபவரம் செயலகத்தில் பொறியியல் உதவியாளராக வேலை பார்க்கும் சௌமியா என்ற பெண்ணை, பட்டப்பகலில் ஐந்து பேர் கொண்ட குழு கத்தி முனையில் கடத்திச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முகங்களை மூடியிருந்த கடத்தல்காரர்கள், திரைப்பட பாணியில் சௌமியாவை வலுக்கட்டாயமாக காரில் தள்ளி அழைத்துச் சென்றனர். இந்த நேரத்தில், அங்கு இருந்த பொதுமக்களை கத்தி காட்டி மிரட்டிய காட்சிகள், இணையத்தில் வெளியாகிய வீடியோவில் பதிவாகியுள்ளது.

உள்ளூர் தகவல்படி, கடத்தல்காரர்கள் பணம் கோரி மிரட்டியதாகவும், AP 31 TJ 1462 என்ற காரில் சௌமியாவை நெலகோட்டா காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. சம்பவம் பகல் நேரத்தில் நடந்ததால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

“>

 

தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வழக்குப் பதிவு செய்தனர். குற்றவாளிகளை பிடிக்க சிறப்பு போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. காணொளி ஆதாரங்களையும், சாட்சிகளின் வாக்குமூலங்களையும் கொண்டு, கடத்தல்காரர்களின் அடையாளம் காணப்பட்டு, தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது.