ஆன்மிக பூமியான ரிஷிகேஷ் கங்கைக் கரையில் வாலிபர் ஒருவர் துளியும் முதலீடு இல்லாமல் வெறும் 3 மணி நேரத்தில் 2,350 ரூபாய் சம்பாதித்து காட்டியுள்ள நூதன பார்ட் டைம் பிசினஸ் ஐடியா வீடியோ ஒட்டுமொத்த நெட்டிசன்களையும்  வியப்பில் ஆழ்த்தி செம ட்ரெண்டாகி வருகிறது.

‘Tan_E’ என்ற சமூக வலைதள பக்கத்தில் பகிரப்பட்டுள்ள வீடியோவில், வாலிபர் ஒருவர் ரிஷிகேஷிற்கு வரும் பக்தர்களுக்குத் திலகம் (நெற்றிப் பொட்டு) வைக்கும் ஒரு புதிய சோஷியல் எக்ஸ்பெரிமெண்ட்டை அசத்தலாகச் செய்து காட்டியுள்ளார். இதற்காகத் திட்டமிட்ட அவர், அங்கிருக்கும் ஆன்மிகச் சூழலுக்கு ஏற்ப பாரம்பரிய குர்தா-பைஜாமா ஆடைகளை அணிந்து கொண்டு, கையில் திலகத் தட்டோடு கங்கைக் கரையின் முக்கிய வீதிகளில் தனது ரவுண்ட்ஸைத் தொடங்கியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Tan_E (@mrtan.e_)

ஆரம்பத்தில் பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்த சந்துகள் மற்றும் தெருக்களில் சென்றிங்கு சுமார் 20 பேருக்குத் திலகம் வைத்த போது, அவருக்கு வெறும் 50 முதல் 60 ரூபாய் மட்டுமே வருமானமாகக் கிடைத்துள்ளது.

இதனால் சோர்ந்து போகாத அந்த வாலிபர், மாலை நேரத்தில் கங்கை ஆரத்தி தொடங்கும் வேளையில் ஒட்டுமொத்த பக்தர்களின் கூட்டமும் கங்கைக் கரையில் அலைமோதிய போது தனது வியாபார யுக்தியை அதிரடியாக மாற்றியுள்ளார். மாலை நேர பக்தி பரவசத்தில் மக்கள் அவரிடம் தானாகவே முன்வந்து நெற்றியில் சந்தனத் திலகம் இட்டுக் கொண்டதால், கூட்டம் அலைமோதி கங்கைக் கரையே ஸ்தம்பித்தது.

யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்டாக, மாலையில் கங்கை ஆரத்தி நடந்த அந்த வெறும் 3 மணி நேர இடைவெளியில் திலகம் வைத்ததன் மூலம் மட்டுமே அவர் மொத்தம் 2,350 ரூபாயை லாபமாக அள்ளியுள்ளார்.

எந்தவொரு முதலீடும் இல்லாமல் சரியான நேரத்தையும், மக்கள் கூட்டத்தையும் பயன்படுத்தி எப்படி புத்திசாலித்தனமாகப் பார்ட் டைம் வருமானம் ஈட்டலாம் என்ற இந்த வாலிபரின் பிராக்டிகல் வீடியோ, தற்போது இணையத்தில் லைக்குகளைக் குவித்து செம வைரலாகி வருகிறது.