உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி பகுதியில் ஒரு லோகோ பைலட் (ரயில் டிரைவர்) செய்த காரியம் சமூக வலைதளங்களில் கிண்டலுக்கும் கண்டனத்திற்கும் ஆளாகியுள்ளது. அங்குள்ள மல்கான் ரயில்வே கேட் அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலை அந்த டிரைவர் திடீரென நிறுத்தினார்.
சுமார் 10 நிமிடங்கள் ரயில் அப்படியே நிற்க, ரயில்வே கேட்டில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அவர் எதற்காக ரயிலை நிறுத்தினார் என்று பார்த்தால், அருகில் இருந்த கடைக்குச் சென்று சிகரெட் வாங்கி வர அவர் ரயிலை நிறுத்தியதாக நேரில் பார்த்தவர்கள் வீடியோ எடுத்துப் போட்டுள்ளனர்.
उत्तर प्रदेश के रायबरेली में सिगरेट लेने के लिए लोको पायलट ने मालगाड़ी ट्रेन रोक दी। 10 मिनट तक ट्रेन रुकी रही जिसकी वजह से क्रॉसिंग पर जाम लग गया। हालांकि रेलवे अधिकारियों ने इस आरोप को खारिज करते हुए सिग्नल समस्या को रुकावट का कारण बताया है। pic.twitter.com/yade9tqcBg
— Bhadohi Wallah (@Mithileshdhar) December 22, 2025
இந்த வினோத வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ரயில்வே நிர்வாகம் இதுகுறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள மக்கள் கூறுகையில், “இது முதல் முறை அல்ல, இதுபோன்ற ரயிலை நிறுத்தும் சம்பவங்கள் அடிக்கடி இங்கு நடக்கிறது” என வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
என்.டி.பி.சி (NTPC) திட்டத்திற்கு நிலக்கரி இறக்கிவிட்டுத் திரும்பிய அந்த ரயிலை, ஒரு சிகரெட் பாக்கெட்டுக்காக 10 நிமிடம் நிறுத்தி போக்குவரத்தைச் சீர்குலைத்தது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடமை தவறிய அந்த டிரைவர் மீது விரைவில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
