சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது மாணவியிடம் “ஜனநாயகம் என்றால் என்ன?” என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு அந்த மாணவி சற்றும் யோசிக்காமல், “ஊரில் மக்கள் செய்யும் மாந்திரீகம் மற்றும் தந்திர வித்தைகளைத் தான் ஜனநாயகம் என்று அழைக்கிறோம்” என்று மிகவும் அப்பாவித்தனமாகப் பதில் அளிக்கிறார்.
இதைக் கேட்ட ஆசிரியர் அதிர்ச்சியில் உறைந்து போக, அருகில் இருந்த மற்ற மாணவிகள் சிரிக்கத் தொடங்குகின்றனர். மாணவி ‘லோக்தந்திர’ (ஜனநாயகம்) என்ற வார்த்தையை ‘தந்திர-மந்திர’ வித்தைகளோடு தவறாகப் புரிந்து கொண்டு இவ்வாறு பதிலளித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
View this post on Instagram
“>
மேலும் ஒருபுறம் நெட்டிசன்கள் அந்த சிறுமியின் பதிலைக் கேட்டு சிரித்து மகிழ்ந்தாலும், மறுபுறம் இது அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் குறித்த கவலையை எழுப்பியுள்ளது. அடிப்படைச் சொற்களின் பொருளைக் கூட மாணவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளாதது நமது கல்வி முறையின் பலவீனத்தைக் காட்டுகிறது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில், இது சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்ப்பதற்காகத் திட்டமிடப்பட்டு எடுக்கப்பட்ட ஒரு வீடியோவாகவும் இருக்கலாம் என ஒரு தரப்பினர் சந்தேகம் எழுப்புகின்றனர். எது எப்படியோ, இந்தச் சிறுமியின் விசித்திரமான விளக்கம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
