சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, டை கட்டுவதில் உள்ள சிரமத்தை வெறும் 10 நொடிகளில் போக்கும் எளிய யுக்தியை அறிமுகப்படுத்தியுள்ளது. அலுவலகம் செல்வோருக்கும், விசேஷங்களுக்குத் தயாராவோருக்கும் டை கட்டுவது என்பது ஒரு பெரிய சவாலாகவே இருந்து வருகிறது. ‘எக்ஸ்’ தளத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், கைகளில் மூன்று முறை டயைச் சுற்றி, ஒரு சில நொடிகளில் மிகக் கச்சிதமான ‘நாட்’ போடுவது எப்படி என்பது மிகவும் தத்ரூபமாக விளக்கப்பட்டுள்ளது.

மேலும் வழக்கமான முறையை விட இது மிகவும் எளிமையாக இருப்பதால், “இதை ஏன் முன்பே எங்களிடம் சொல்லவில்லை?” என்று இணையவாசிகள் ஆச்சரியத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த எளிய முறையில், டையில் அகலமான பகுதியை இடது கையில் வைத்து மூன்று முறை சுற்ற வேண்டும். பின்னர், கையின் நடுப்பகுதியில் உள்ள மடிப்பை லாவகமாக மேலெடுத்து இழுப்பதன் மூலம் நேர்த்தியான முடிச்சு உருவாகிறது.

“>

இந்த சாதாரண முறையில் டை கட்டுவதற்கு இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வரை ஆகும் நிலையில், இதனை ‘நிஞ்சா’ டெக்னிக் மூலம் வெறும் 10 நொடிகளில் வேலையை முடிக்க முடிகிறது. பள்ளி மாணவர்கள் முதல் தொழில்முறை வல்லுநர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ள இந்த வீடியோ, தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதைப் பார்த்த பலர், டை கட்டுவது என்பது இவ்வளவு சுலபமான காரியமா என வியப்படைந்து பாராட்டி வருகின்றனர்.