அண்ணாமலை தலைமை பாஜகவிற்கு எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த சசிகலா, அவங்களோட கட்சியில் அவங்களோட தலைமை எடுக்க வேண்டிய முடிவு. திமுக சொன்னது எதையும் செய்யவில்லை. வாய் வார்த்தையாக சொல்வது என்பது வேற,  அவங்க என்ன பண்ணிட்டு இருக்காங்க ? தேர்தல் அறிக்கை என கதை புக் மாதிரி போட்டாங்க. ஒரு புத்தகமா போட்டிருக்காங்க. மக்கள் படிகட்டும் அதை ஒரு கதை மாதிரி நினைச்சு கொடுத்திருக்கிற மாதிரி தான் எனக்கு தெரியுது. நானே இப்ப கூட பேசும்போது கேட்டேன்.

அவங்க சொன்ன எதையுமே செய்யல. அதுதான் உண்மை. நாங்க 88% வாக்குறுதியை முடிச்சுட்டோம்னு சொல்றது எல்லாம் பொய்  100% வாக்குறுதியை நாங்க முடிச்சிட்ட்டோம்னு கூட அவுங்க சொல்லுவாங்க.  அதெல்லாம் அவங்களுக்கு கைவந்த கலை. திமுக என்றாலே அப்படித்தான்.  சொல்லுவது ஒன்னு,  செய்றது ஒன்னு.

மகளிர் உரிமைத்தொகை கொடுத்ததை DMK மிகப் பெரிய சாதனையாக  பேசிக்கிட்டு இருக்காங்க. அது போக போக பார்த்தா தானே தெரியும்.   தமிழக அரசின் நிதிநிலை இன்றைக்கு இருக்கிற சூழ்நிலையை பார்க்கும்போது,  தேர்தல அறிக்கையில் சொல்லும் போது அவங்களுக்கு தெரியனும் இத  செய்ய முடியுமா ? அப்படின்னு கொஞ்சம் யோசிச்சு பாக்கணும்.

அதெல்லாம்  இல்ல  இஷ்டத்துக்கு செல்லுவாங்க. உடனடியா அவங்களுக்கு ஆளுங்கட்சி ஆகணும்,  முதலமைச்சராகனும் அப்படிங்கற ஒரே குறிக்கோள் அவங்க தேர்தல் அறிக்கையில்  தெரியுது. ஏன்னா இது இம்பாசிபிள்,  முடியாது. இது முடிக்கிறது ரொம்ப கஷ்டம்.  நானும் அம்மா கூட இத்தனை வருஷங்கள் கூட இருந்திருக்கேன். அது வந்து ரொம்ப கஷ்டம் என்பது தான் என்னுடைய கருத்த. வேணும்ன்னா 2024 தேர்தலுக்காக அவுங்க அப்படி சொல்லலாம். ஆனால்  அவங்க செய்யல.

இப்ப நீங்க ஸ்கூல் பிள்ளைகளுக்கு பாத்தீங்கன்னா…..  இப்போ 29 மாதம் ஆச்சு அவங்க ஆட்சிக்கு வந்து.  ஒரு வருடத்திற்கு பாத்தீங்கன்னா…. பிளஸ் 2 முடிச்சுட்டு கிட்டத்தட்ட 9 லட்சம்  ஸ்டூடண்ட்ஸ் வெளியே போயிருக்காங்க…அவங்களுக்கு லேப்டாப் கொடுத்தாங்களா ? ரெண்டு வருஷம் பாத்தீங்கன்னா… 18 லட்சம் பேர் வெளிய போயிருக்காங்க, அதையே கொடுக்க முடியலையே…   அப்போ அந்த 18 லட்சம் பேர் வெளியில் போனது போனது தானே.

அவங்களுக்கு  லேப்டாப்  கிடைக்காது இல்ல. அத அரசாங்கம்  நினைத்து பார்க்கல. இன்னும் சொல்லப்போனால்,  கல்வித்துறையில் உள்ளவர்,  நாங்கள் லேப்டாப் கொடுக்கலாமா ? அல்லது டேப் கொடுக்கலாமா ? அப்படின்னு யோசிச்சுகிட்டு 29 மாசம் இருந்திருக்காங்க.

ஒரு முடிவு எடுத்து கொடுக்கனுல்ல, உங்களால கொடுக்க முடியல. அதே மாதிரி தான் நான் சொல்றேன். இந்த 1000 ரூபாய் விஷயமும். அவங்க சொன்னத குடுக்கணும்ங்குறது தான் என்னோட எண்ணம். ஆனால் கொடுக்க முடியாததை சொல்லி இருக்காங்க, அப்படிங்கறது தான் தமிழக அரசினுடைய நிதி நிலைய பார்த்து நான் சொல்றேன். அது மட்டும் இல்ல இன்னொன்னு சொல்றேன்.

தேர்தல் வரைக்கும் ஒன்னு பேசுவாங்க. தேர்தல் முடிஞ்சுச்சுன்னா…. அடுத்தது பார்லிமென்ட் தேர்தல். ரெண்டு வருஷத்துக்குள்ள வருது நமக்கு. அதனால இப்போ அதற்காகத்தான் இந்த ஆயிரம் ரூபாய்ன்னு கூட சொல்லுறது. இது நீங்க எல்லாமே என்கிட்ட ஒரு நாள் பேசும்போது சொல்லுவீங்க…  ரூ.1000 தொடர்ந்து கொடுக்கல…  நீங்க சொன்னது சரிதான் அப்படின்னு தான் நீங்க எல்லாம் சொல்ல போறீங்க என தெரிவித்தார்.