முக்குலத்தோர் புலிப்படை சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்ட்சியின் நிறுவனர் கருணாஸ், இந்த மண்ணை காக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு உனக்கும்,  எனக்கும் தான் இருக்கு. அவன் அவன் எல்லாம் பண்ணுவான், கத்துவான், ஓடிவிடுவான். இந்த ஊர்ல இருக்க கூடிய பணக்காரன் எல்லாம் பாத்தீங்கன்னா….  மொத தமிழ் காரணமாக இருக்க மாட்டான்,  அதையும் மனசுல வச்சிக்கோ. நான் இப்ப சொன்னா உங்களுக்கு ஆச்சரியமா இருக்கும்…

எல்லாம் சொல்லுவான்… கருணாஸ் வீட்டை பாரு,  கருணாஸ் தோட்டத்தை பாரு.  என்ன ஒரு 14 ஏக்கர். ஒரு ஏக்கர் அஞ்சு லட்ச ரூபாய்.  மொத்தம் 65 லட்ச ரூபாய்க்கு 122 படம் நடிச்சு அதை கூட வாங்குவதற்கு வக்கில்லாமையா கருணாஸ் இருந்திருப்பான். ஆனால் அதை ஒருத்தன் எடுத்து போட்ட உடனே, என்னமோ இந்த உலகத்துல நான் தான் விவசாய பண்ற மாதிரி… நான்தான் தோட்டம் வச்சிருக்க மாதிரி….

அவனவன் 5000 ஏக்கர், 10,000 ஏக்கர், இருக்கின்ற ஹார்பர், அது, இதுன்னு ஆட்டைய போட்டுட்டு,  அதானி, குதானின்னு சுத்திட்டு திரிகிறான். அதெல்லாம் விட்டுட்டாங்க. நாம ஒருத்தரை மட்டும் பிடிச்சுப்பான். இறை நம்பிக்கை எல்லோருக்கும் இருக்கும். நித்தியானந்தாவை கும்பிட கூடிய உங்களிடத்திலே நான் தேவரை கும்பிடுவதில் என்ன தவறு இருக்கிறது என்று நான் யோசிக்கவில்லை ?

ஒரு சாய்பாபா இப்படி உங்களுக்கு பிடித்த இஷ்ட தெய்வங்களை கூப்பிடுவதில் தவறில்லை,  ஆனால் எனக்கு பிடித்த ஒரு சித்த தெய்வ திருமகனாரை நான்  கும்பிட்டால் என் மீது சாதி அடையாளம். பரவாயில்லை,  அதைப் பற்றி எனக்கு கவலையும் இல்லை என தெரிவித்தார்.