நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதி சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இங்கு அன்னாசி, வாழை, எலுமிச்சை, மிளகு, ஏலக்காய் உள்ளிட்ட பொருள்கள் விவசாயம் செய்யப்படுகிறது. குறிப்பாக அதிக அளவு மிளகு பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் மிளகு சாகுபடி நடைபெற்று வருகிறது.

தற்போது கொல்லிமலை மிளகு கிலோ ரூ.550 லிருந்து ரூ.570 வரை விற்பனை செய்யப்படுகிறது. நறுமணப் பொருட்களில் ஒன்றான மிளகு, கேரளாவில் இருந்தே அதிகளவில் தமிழ்நாட்டுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.