வார விடுமுறை, கோடை விடுமுறையையொட்டி, மக்கள் சொந்த ஊர் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுப்பதைக் கருத்தில் கொண்டு, மதுரை, குமரி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்பட தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்