பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் உருவான  ஆர்ஆர்ஆர் படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்தப் படம் உலகம் முழுவதும் 1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்த நிலையில், படத்தில் இடம்பெற்ற நாட்டுக்கூத்து பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.

இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்த நிலையில் கீரவாணி இசையமைத்திருந்தார். இந்நிலையில் சமீப காலமாக முன்பு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஆர்ஆர்ஆர் திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் அதன்படி இந்த படம் நாளை அதாவது மே 10-ம் தேதி திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.