தென்னிந்தியத் திரை உலகில் குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் பேராதரவைப் பெற்று முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ள மமிதா பைஜு, ஒரே ஆண்டில் தொடர்ந்து மூன்று ரூ.100 கோடி வசூல் சாதன படங்களைக் கொடுத்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தமிழ், மலையாளம் என இரு மொழி ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்த இவர், தற்போது தென்னிந்தியச் சினிமாவின் அதிர்ஷ்டக் கதாநாயகியாகவும், வசூல் ராணியாகவும் பார்க்கப்படுகிறார். ஒரே ஆண்டில் மூன்று படங்கள் நூறு கோடி வசூல் கிளப்பில் இணைந்தது, அவரது திரைப் பயணத்தில் ஒரு மாபெரும் மைல்கல்லாக அமைந்துள்ளது.
திரைத்துறையில் பல கதாநாயகிகளுக்குக் பல ஆண்டுகள் கழித்து மட்டுமே கிடைக்கும் இத்தகைய பிரம்மாண்ட வசூல் சாதனை, மமிதாவிற்கு மிக விரைவிலேயே சாத்தியமாகியுள்ளது. தமிழில் இவரது நடிப்பில் வெளியான ‘டியூட்’ மற்றும் விஜய் சாருடன் இணைந்து நடித்த ‘ஜனநாயகன்’, சூர்யாவுடன் நடித்த ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனையைப் படைத்தன.
அதனைத் தொடர்ந்து தற்போது நிவின் பாலியுடன் இணைந்து நடித்த ‘பெத்லேகேம் குடும்ப யூனிட்’ திரைப்படமும் உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளது. தொடர்ச்சியாக இவர் நடிக்கும் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றி பெற்று வருவதால், தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் இவரைத் தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்யப் போட்டி போட்டு வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் “மமிதா பைஜு சகாப்தம்” என்று ரசிகர்கள் இதைக் கொண்டாடி வரும் நிலையில், மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் இவரது நட்சத்திர அந்தஸ்து உச்சத்தைத் தொட்டுள்ளது. ஒரே ஆண்டில் ஹாட்ரிக் 100 கோடி ஹிட் கொடுத்த இளம் நடிகை என்ற பெருமையுடன், தென்னிந்தியச் சினிமாவின் மார்க்கெட் விரும்பும் முதல் வரிசை நடிகையாக மமிதா பைஜு கம்பீரமாக வலம் வருகிறார்.
