அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது வெள்ளை மாளிகை சிறப்பு உதவியாளரான நடாலி ஹார்ப் இடையேயான விசித்திரமான நெருக்கம், மீண்டும் ஒருமுறை சர்வதேச ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பாடகி டாலி பார்ட்டன் தொடர்பாக டிரம்ப்பின் ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் வெளியிடப்பட்ட பதிவு ஒன்றைத் தொடர்ந்து, 34 வயதான நடாலி ஹார்ப்பின் செயல்பாடுகள் “அருவருப்பானது” என்றும், “அச்சமூட்டும் தீவிரப் பித்து” என்றும் உலகளவில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
டிரம்ப் செல்லும் இடமெல்லாம் கையோடு ஒரு போர்ட்டபிள் பிரிண்டரை எடுத்துக்கொண்டு சுற்றி வருவதால் ‘ஹியூமன் பிரிண்டர்’ என்று அழைக்கப்படும் நடாலி, இந்த விவகாரத்திலும் அவராகவே இணையத்தில் தேடி எடுத்த ஒரு பதிவை அச்சிட்டு டிரம்ப்பிடம் காட்டி ஒப்புதல் பெற்றுப் பதிவேற்றியுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.
டிரம்ப்புடன் நடாலி ஹார்ப் எப்போதும் மிக நெருக்கமாக நிற்கும் புகைப்படங்களும், ஓவல் அலுவலகத்தில் டிரம்ப் பேட்டி அளிக்கும்போது பின்னணியில் அவர் விசித்திரமான புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருக்கும் காட்சிகளும் இணையத்தில் வைரலாகி பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளன.
அமெரிக்காவின் அதிபருக்குப் பக்கபலமாக இருக்கும் ஒரு அதிகாரி என்பதைத் தாண்டி, டிரம்ப் மீது அவர் கொண்டிருக்கும் தீவிரமான ஈர்ப்பு மற்றும் பித்து பிடித்த போன்ற அணுகுமுறை குறித்துப் பல முன்னணி பத்திரிகையாளர்கள் தங்களது புத்தகங்களில் வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும் “என் வாழ்க்கையில் நீங்கள் மட்டுமே எனக்கு முக்கியம்” என்றும், “குடும்பத்தினரை விட நீங்கள் தான் எனக்கு எல்லாம்” என்றும் டிரம்ப்பின் தனிப்பட்ட அறைகளில் நடாலி கடிதங்களை எழுதி வைப்பதாக வெளியான தகவல்கள், அமெரிக்க அதிபர் பாதுகாப்பு அமைப்பான சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகளையே அதிர்ச்சியடைய வைத்ததாகக் கூறப்படுகிறது.
அரசியல் மற்றும் நிர்வாக ரீதியான எந்த ஒரு தணிக்கையும் இன்றி, அதிபரின் அதிகாரப்பூர்வ கருத்துகளைத் தீர்மானிக்கும் சக்தியாக ஒரு தனிப்பட்ட உதவியாளர் உருவெடுத்துள்ளது வெள்ளை மாளிகை அதிகாரிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்ப்பிற்குப் பிடித்தமான செய்திகளையும், அவருக்கு ஆதரவான இணையத்துப் பதிவுகளையும் மட்டுமே அவரிடம் கொண்டு சேர்த்து, நாட்டின் முக்கிய முடிவுகளைக்கூடத் திசைதிருப்பும் அதிகார மையமாக நடாலி மாறிவிட்டார் என்று அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஒரு சாதாரண சமூக வலைதளப் பதிவாகத் தொடங்கி, இன்று அமெரிக்க அதிபரின் அலுவலகப் பாதுகாப்பு மற்றும் அதிகார வரம்பையே கேள்விக்குறியாக்கியுள்ள இந்த சம்பவம், உலகளவில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
