இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவில் சுற்றுலாவை  நம்பி தான் பொருளாதார இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் மாலத்தீவு அதிபராக பொறுப்பேற்ற முகமது முய்சு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். அதோடு பிரதமர் மோடியை மாலத்தீவு அமைச்சர்கள் விமர்சனம் செய்ததால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனால் மாலத்தீவு செல்லும் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதன் காரணமாக தற்போது மாலத்தீவு சுற்றுலாத்துறை அமைச்சர் இப்ராஹிம் பைசல் ஒரு முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளார்.

அதாவது இந்தியர்களிடம் மாலத்தீவுக்கு சுற்றுலாவுக்கு வாருங்கள் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அதன் பிறகு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எங்களுடைய அரசு இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புவதோடு புதிய நட்புறவையும் ஏற்படுத்த விரும்புகிறது. எங்களுடைய மக்களும் அரசாங்கமும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு அன்பான வரவேற்பை வழங்குவார்கள். எனவே இந்தியர்கள் தயவுசெய்து மாலத்தீவு சுற்றுலா பயணத்தின் ஒரு அங்கமாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் எங்களுடைய பொருளாதாரமே சுற்றுலாவை நம்பி இருப்பதால் இந்தியர்கள் எங்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.