வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்…. தலா 50 லட்சம் ரூபாய் அபதாரமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் செல்வபெருந்தகை,   ஏதோ நீதிமன்றங்கள் தீர்ப்பு கொடுத்துட்டாங்க….  ஆகையால் மிகப்பெரிய பின்னணி…..  மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் இதெல்லாம் சொல்ல முடியாது…

66 கோடி ஊழலில் ஈடுபட்ட அம்மையாருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை. 1  கோடி 69 லட்சம் குற்றச்சாட்டுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை இதெல்லாம் நாம வாதம் பண்ணுனா நிறையா பேசலாம். 2014இல் ஜெயலலிதா அம்மையாருக்கு குன்ஹா நீதிமன்றத்தில் தீர்ப்பு கொடுத்தாங்க.  2016இல் மீண்டும் ஆட்சிக்கு வரவில்லையா அவங்க ….

நீங்க அப்படித்தானே பாக்கணும்….  அது எப்படி நீங்க இதை மாற்ற முடியும்…..  ஒரு முறை ஒரு அமைச்சருக்கு தண்டனை கொடுத்தா….  அடுத்த முறை ஆட்சிக்கு வர முடியாது என்று அப்படியெல்லாம் சொல்ல முடியாது….1996 என்பது வேற. 1996இல் அந்த அம்மாவுக்கு ஒரு தண்டனையும் கொடுக்கலையே….  அந்த டைம்ல சொத்து குவிப்பு வழக்கு  நீதிமன்ற நிலுவையில் தான் இருந்தது.

பொன்முடி அவர்கள் அனுபவம் உள்ளவர். பொதுவாழ்வில் அனுபவம் உள்ளவர். அவருடைய அனுபவத்தை பிறரோடு ஒப்பிட்டு பார்க்க முடியாத அளவுக்கு அவருடைய அணுகுமுறை இருக்கு…. அவர் வழக்கை எதிர்கொள்வார். ஓடி ஒளியுற நபர் கிடையாது…. அமைச்சர் கிடையாது…..  கண்டிப்பாக எதிர்கொள்வார். உச்ச நீதிமன்றம் அவருக்கு இவருடைய கருத்தின் அடிப்படையில்  விடுதலை வாங்குவதற்கு வாய்ப்புகள் இருக்கு என தெரிவித்தார்.