காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தொடர்புள்ள இடங்களிள் சோதனை நடைபெற்று வருகிறது.

காலிஸ்தான் தொடர்பு பஞ்சாப் மற்றும் கனடா ஆகிய இரண்டு இடங்களிலும் இருக்கிறது.  காலிஸ்தான் மீண்டும் வேண்டும் என கனடா நாட்டிலேயே தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருபவர்கள், சட்டவிரோத நடவடிக்கைகள் மூலமாக பணம் சேர்க்கும் கும்பல்களுக்கு புகலிடம் அளித்து, அந்த கும்பல்களிடமிருந்து பணம் பெற்று,  அதனை காலிஸ்தான் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகிறார்கள்.

கனடா உள்ளிட்ட நாடுகளிலே இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.  இந்தியாவிலேயேகுற்ற செயல்கள் நடைபெறுகின்றன. இந்த இரண்டுக்குமே நேரடி தொடர்பு உள்ளதா ? என்பதை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு முகமை தற்போது பஞ்சாப் உள்ளிட்ட வாடா மாநிலத்தின் 50 இடங்களில் சோதனை நடத்தி வருகிறது.

இன்று மாலை வரை இந்த சோதனைகள் தொடரலாம் எனவும்,  ஆதாரங்கள் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யும்போது நீதிமன்றத்திலே சமர்ப்பிக்கப்படும் எனவும் தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். இந்தியா,  கன்னடா இடையே காலிஸ்தான் விவகாரம் தொடர்பாக கடுமையான உரசல் நடத்து வரும் சூழலில் தான்,  இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நேற்று கூட கனடாவில் இந்தியாவுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று,  அங்கே இந்திய தேசிய கொடியை அவமதிப்பது போன்ற செயல்கள் நடைபெற்றிருக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில் தான் காலிஸ்தான் ஆதரவாளர்கள் மற்றும் அவர்களுடன் சேர்ந்து செயல்படுபவர்கள் ஆகியோர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேசிய புலனாய்வு முகமை இந்த சோதனை நடத்தி வருகிறது.