பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களின் 50 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 30 இடங்கள்,  அது தவிர அரியானா,  உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் 20 இடங்கள் ஆகியவற்றில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்  இன்று விடியற்காலை முதல் சோதனை நடத்தி வருகின்றார்கள். காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

தேசிய புலனாய்வு முகமை பல்வேறு வழக்குகளை பதிவு செய்திருக்கிறது. அதிலே காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவிலேயே குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுடன் கைகோர்த்து கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து போதைப்பொருள் கடத்தல்,  ஆள் கடத்தல் மற்றும் சட்ட விரோத பண பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக புகார் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் இந்த சோதனை நடைபெறுகின்றது.