தமிழகத்திற்கு ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட டிஎம்சி அளவுகளில் காவிரியில் இருந்து நீர் திறக்கப்பட வேண்டும் என்ற ஒப்பந்தம் உள்ளது. இருந்தாலும் கடந்த சில வருடங்களாக கர்நாடகா அரசு தமிழகத்திற்கு சரியான விகிதத்தில் நீரை திறந்து விடுவதில்லை. இதற்காக இரண்டு மாநில அரசுகளும் மற்றும் மத்திய அரசும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டும் இதுவரை எந்த ஒரு நிரந்தர தீர்வும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கர்நாடக அரசு தற்போது தமிழகத்திற்கு இனி காவிரியில் இருந்து தண்ணீரை திறக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அதாவது 161 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்திற்கு இனி நீர் அளிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் 53%  மழை பற்றாக்குறை இருப்பதால் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறக்காத பட்சத்தில் பல ஆயிரம் ஏக்கர் கணக்கிலான விளைநிலங்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.