தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தின் ராம்பள்ளி பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் நேற்று மதியம் துணிச்சலான கொள்ளை முயற்சி ஒன்று நடைபெற்றது. முகத்தை மூடிக்கொண்டு கடைக்குள் நுழைந்த இரண்டு மர்ம நபர்கள், அங்கிருந்த கடை உரிமையாளரையும் வாடிக்கையாளர்களையும் துப்பாக்கி மற்றும் கோடரியைக் காட்டி மிரட்டினர். அப்போது கடை உரிமையாளரின் மகனும் அங்கிருந்த நிலையில், கொள்ளையர்கள் நகை மூட்டையுடன் தப்பிக்க முயன்றனர்.
VIDEO | Hyderabad: CCTV footage from a jewellery shop at Rampalli X Roads shows shop owners resisting two robbers armed with a gun and an axe during an attempted heist on Friday noon, forcing the duo to flee without looting any jewellery. Further details awaited.
(Source: Third… pic.twitter.com/SE1Q2JDHQR
— Press Trust of India (@PTI_News) January 2, 2026
இருப்பினும், சற்றும் மனம் தளராத கடை உரிமையாளர் கொள்ளையர்களில் ஒருவரைத் துணிச்சலுடன் பிடித்து மற்போர் புரிந்தார். உரிமையாளரின் இந்தத் திடீர் எதிர்ப்பால் நிலைதடுமாறிய கொள்ளையர்கள், கொண்டு வந்த ஆயுதங்கள் மற்றும் நகைகள் அடங்கிய பையை அங்கேயே போட்டுவிட்டு வெறும் கையுடன் தப்பி ஓடினர். இந்தச் சம்பவம் தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்போது வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தப்பியோடிய கொள்ளையர்களைப் பிடிக்கக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
