உம்ராவிற்குச் சென்று திரும்பிய முஸ்லிம் பெண்ணை, அவரது இந்து தோழி ‘ஆரத்தி’ எடுத்து வரவேற்ற நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மதங்களுக்கு அப்பாற்பட்ட இந்த ஆழமான நட்பைக் காட்டும் வீடியோ, இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் சகோதரத்துவத்திற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
புனிதப் பயணம் முடித்து வீடு திரும்பிய தோழியை, பாரம்பரிய முறைப்படி ஆரத்தி எடுத்து நெகிழ்ச்சியுடன் வரவேற்ற காட்சி பார்ப்பவர் கண்களைக் குளிரச் செய்கிறது. இந்த வீடியோ ‘யுபியுகே லைவ்’ மூலம் பகிரப்பட்ட நிலையில், சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
View this post on Instagram
“>
இந்த மதவெறுப்புச் செய்திகளுக்கு மத்தியில், உண்மையான அன்பு மற்றும் நட்பிற்கு எந்த எல்லையும் இல்லை என்பதை இந்தத் தோழிகள் நிரூபித்துள்ளனர். “நட்புக்கு மதம் கிடையாது” என்ற கருத்தை வலியுறுத்தும் இந்த வீடியோ, மனிதநேயமே எல்லாவற்றையும் விட மேலானது என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளது.
