விலங்குக் காட்சி சாலை ஒன்றில், பார்வையாளர்கள் கூண்டின் அருகில் நின்று சிங்கங்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஒரு சிறுமியின் நிலை தடுமாறி சிங்கங்கள் இருக்கும் கூண்டிற்குள் விழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தன் மகளின் உயிரைக் காப்பாற்ற அந்தத் தாய் சற்றும் யோசிக்காமல், உடனே சிங்கங்கள் இருந்த கூண்டுக்குள் பாய்ந்து குதித்துள்ளார்.

கூண்டுக்குள் சிங்கம் மற்றும் ஒரு பெண் சிங்கம் இரண்டும் அருகில் இருந்த நிலையில், அச்சமயம் அந்தக் கூண்டுக்குள் நுழைவது கற்பனை செய்ய முடியாத ஒரு ஆபத்தான காரியமாகும்.

ஆனால், தாயின் பாசத்திற்குக் கட்டுப்பட்டு, அவர் இந்த அசாத்தியமான துணிச்சலைக் காட்டியுள்ளார். இந்த வீடியோவில், தாய்-மகள் இருவரும் சிங்கங்களுக்கு மிக அருகில் இருப்பதைக் காண முடிகிறது.

இந்த உருக்கமான வீடியோவைப் பார்த்த பலரும், தாய்மையின் வலிமை மற்றும் உயிரைப் பணயம் வைக்கும் பாசம் குறித்து நெகிழ்ச்சியுடன் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.