ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூர் பகுதியில் ஹாதினி குண்ட் நீர்வீழ்ச்சி சுற்றுலா தளத்தில் ஜடாதாரி துறவி இளைஞர்களை குச்சியால் விரட்டி அடித்த சம்பவம் வீடியோவாக இணையத்தில் வைரலாக வருகிறது. அதாவது ஜெய்ப்பூர் ஹாதினி குண்ட் நீர் வீழ்ச்சி பகுதியில் உள்ள சிறிய ஆசிரமத்தில் ஜடாதாரி துறவி ஒருவர் தியானம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த சில இளைஞர்கள் அவரது அமைதியை கெடுக்கும் வகையில் சத்தம் போட்டு சலசலப்பை ஏற்படுத்தினர். இதனால் கோபமடைந்த துறவி இளைஞர்களை அமைதியுடன் எச்சரித்தார். ஆனால் அந்த இளைஞர்கள் துறவியின் வார்த்தை களை மதிக்கவில்லை. தொடர்ந்து அவரது தியானத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கூச்சலிட்டு, சத்தமிட்டு சிரித்து, சைகைகளால் தொந்தரவு செய்த நிலையில் ஆத்திரமடைந்த துறவி ஒரு குச்சியை எடுத்து அந்த இளைஞர்களை விரட்டினார்.
जयपुर के हथिनी कुंड पर बाबा और युवकों में झरने के पास गाली-गलौज को लेकर विवाद हुआ
◆ बाबा ने पत्थर फेंके, फिर डंडों से हुई हाथापाई, युवक गड्ढे में गिरा
◆ ट्यूरिस्ट के बनाए वीडियो पर ब्रह्मपुरी पुलिस ने जांच शुरू की#HatniKund | Baba Vs Youth | #JaipurClash pic.twitter.com/Pcw25JwMoH
— News24 (@news24tvchannel) July 22, 2025
இந்த சம்பவம் அனைத்தும் வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு இளைஞருடன் நேரடியாக சண்டையிடும் காட்சி இடம் பெற்றுள்ளது. அதோடு இளைஞர் ஒருவரை அருகில் உள்ள குழியில் தூக்கி எறிந்தது போல காட்சிகள் காணப்படுகிறது. தற்போது இந்த வீடியோ வேகமாக வைரலாகி வரும் நிலையில் துறவியின் ஆவேசமான செயல் அவரது தன்னிகரற்ற தற்காப்பு திறனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
மேலும் துறவியின் அமைதியான வாழ்விடம் கெட்டுப் போனது என்ற வருத்தம் எழும் நிலையில் இளைஞர்களின் ஒழுங்கற்ற நடத்தைக்கு தண்டனை அளிக்கப்பட்டது என்று துறவிக்கு பாராட்டுக்கள் தெரிவித்து சமூக வலைதள வாசிகள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் தியானம் போன்ற ஆன்மீக நிலைகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.
