ஆளுநருக்கு எதிராக”அடங்கி இரு” ”தமிழகத்தைவிட்டு வெளியேறு” என DMK சார்பில் சென்னையில் ஒட்டி இருக்கும் போஸ்டர் குறித்து கருத்து கூறிய சீமான், 

அது சரிதான். அந்த கட்சியே அடித்ததினால் உங்களுக்கு தெரிகிறது… பொதுவான மக்களின் மனநிலையே இதுதான். சாதாரண மக்களிடம் பேச்சு  கொடுத்தாலே, ஆளுநர் நடந்துகொள்ளும் விதம் யாருக்குமே பிடிக்கவில்லை. இப்போது ஆன்லைன் ரம்மி அந்த விளையாட்டு மக்களை பாதிக்கிறது. பல தற்கொலைகள் நடந்தது. அஅது வேண்டாம் சொன்னாலும்,  கிராமங்களில் எல்லாம் மந்தையில உட்கார்ந்துட்டு 4 பேரு சீட்டு ஆடினாலே கைது பண்ணி உள்ள போட்டு விடுவார்கள்.

இது   அங்கீகரிக்கப்பட்டு ஆன்லைனில் ரம்மி விளையாட்டு, நான்  விளையாண்டு பைக்கு வாங்கினேன் என்று  டிவியில் விளம்பரம் வருது. ஒரு அம்மா ஏதோ ஒன்னு பேசுது… அதுபோல விளம்பரங்கள் வரும் பொழுது அது சரியாக இல்லை,  தடுக்கனும்னு அரசு தீர்மானத்தை கொண்டு வந்தால்,  அதற்கு கையெழுத்து போட வேண்டும். மக்கள் நலன் சார்ந்து வருவதற்கு கையெழுத்து போட வேண்டும். அது போட முடியாது என்று சொல்வது எல்லாம் தப்பு. அதனால்தான்… அந்த  எதிர்ப்பை எப்படி வெளியே கட்டுவது என்று தெரியாமல் தான் இந்த சுவரொட்டி ஓட்டுகிறார்கள்.

”அடங்கி இரு” என்ற வார்த்தையை விட்டு ஜனநாயகத்திற்கு கட்டுப்பட்டு இருன்னு சொல்லுங்கள். இல. கணேஷன் ஆளுநருக்கு சட்டம் தெரியும், நிர்வாகம் தெரியும் என சொன்னது போல ஒரு செயலிலும் ஆர்.என் ரவி காட்டவில்லை. ஒரு செயலில் கூட அவர் பொறுப்பேற்றதில் இருந்து இந்த செயலில் சட்டம் தெரிந்தவர், அவருக்கு ஜனநாயகம் தெரிந்திருக்கிறது, அரசியல் தெரிந்திருக்கிறது,  என்று எதுவுமே இல்லை.

அவர் ஏதோ ஒன்னு படித்திருக்கிறார்…. யாரோ எழுதி கொடுத்ததை பேசுகிறார். திடீர்னு வள்ளலாரை சனாதன தர்மத்தின் உடைய உச்ச நட்சத்திரமும் இவர்தான். பத்தாயிரம் ஆண்டுகளாக சனாதனம் தர்மம் இருக்கு என்று சொல்லுகிறார். பத்தாயிரம் ஆண்டு முன்னாடி இந்த நிலப்பரப்பு எது ?  நீங்கள் யாரு ? நான் யாரு ? என்னத்தையாவது வாய்க்கு வந்ததை… யாராவது எழுதிக் கொடுப்பதை பேசிக்கொண்டு போவது தான். உயர்ந்த இடத்தில் இருக்கும் போது அவர்கள் சொல்லுகின்ற வார்த்தை ஊடகத்தில் வந்து விடுகிறது. இது உண்மையாக இருக்குமே,  என்று வந்து விடுகிறது.வெள்ளையாய் இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்ற கதை தான்… அது மாதிரி சொன்னதும் இது நம்பப்பட்டுள்ளது என தெரிவித்தார்.