செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், டிசம்பர் அல்லது ஜனவரியில் கூட்டணி பற்றிய முடிவு நாங்கள் தெரிவிப்போம். ஆளுநர் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக நீதிமன்றம் நடவடிக்கை எடுப்பதை  தடுக்கின்ற விதமாக…. நீதிமன்றம் தான் முடிவு செய்யனும்…  அதை இவ்வளவு  காலம் ஆளுநர் காலம் தாழ்த்தியது தவறு.

ஆளுநர் இது போன்ற தவறான முன்னுதாரணங்களை செயல்படுத்தினால்,  வருங்காலத்திலே நாடு முழுவதும் ஊழல் பெருக்கெடுத்து ஓடுவதற்கும்,  ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் துணிந்து ஊழல் செய்வதற்கும் வழி வகுக்கும்.

திமுக ஆட்சியில் 500 வாக்குறுதிகளுக்கு மேல் சொல்லி…. கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டு காலம் ஆட்சி முடிந்தும்… மக்கள் விரோத ஆட்சியாக…. மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சியாக இந்த ஆட்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

எல்லாத்தையும் ஊழல், எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற ஒரு நிலை…. சரியான நிர்வாகத் திறமை இல்லாத ஒரு நிலையும் தான் இந்த ஆட்சியில் இருக்கிறது. இரண்டரை ஆண்டுகளிலே  இந்த ஆட்சியில்  மக்கள் பெரும் கோபமாக இருக்கின்றார்கள். ஏற்கனவே பழனிச்சாமி செய்த தவறுகளால்,  மக்கள் திமுக திருந்தி இருக்கும் என்று ஆட்சி பொறுப்பை கொடுத்தார்கள்.

இன்றைக்கு திமுகவும் திருந்தவில்லை என்பதை உணர்ந்து இருக்கிறார்கள். வரும் காலத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தான்…  தமிழ்நாட்டிற்கு மாற்று சக்தியாக….  விடிவு காலமாக இருக்கக்கூடும் என்பதை  தமிழ்நாடு முழுவதும் மக்கள் உணர்ந்து வருவதை எங்களால் அறிய முடிகிறது என தெரிவித்தார்.