பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக சிறையில் இருந்தபோது உயிரிழந்த கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ரகசிய ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை (DoJ) தற்போது வெளியிட்டு வருகிறது.
தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவில், எப்ஸ்டீன் ஒரு சமையலறை பகுதியில் இளம் பெண்களையும், சிறுமிகளையும் ‘விளையாட்டாகத் துரத்துவது’ போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.
🚨BREAKING: Disturbing video of Jeffrey Epstein chasing little girls around his kitchen
Sickening
Prince Andrew must be put on trial for his ties
Every single client of his must be caught pic.twitter.com/7bNl6hcDru— Basil the Great (@BasilTheGreat) January 31, 2026
அமெரிக்க அரசின் வெளிப்படைத்தன்மை விதிகளின்படி, எப்ஸ்டீன் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ரகசிய கோப்புகள் பொதுமக்களின் பார்வைக்காகத் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்த வீடியோக்களில் உள்ள பெண்களின் முகங்கள் மறைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், எப்ஸ்டீனின் அதிகார பலம் மற்றும் அவரது நெட்வொர்க் எப்படியெல்லாம் செயல்பட்டது என்பதற்கு இந்த வீடியோ ஒரு முக்கிய ஆதாரமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த ஆவணங்கள் வெளியாவதால் எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்த பல உலகத் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களின் பெயர்கள் மீண்டும் அடிபடத் தொடங்கியுள்ளன. இது சர்வதேச அளவில் ஒரு பெரிய அரசியல் நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
