இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே அரசியல் ரீதியான பதற்றங்கள் நிலவி வந்தாலும், இரு நாட்டு மக்களிடையே இன்னும் அன்பு மாறவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவைச் சேர்ந்த ஒரு வீடியோ (Vlogger சமீபத்தில் பாகிஸ்தானுக்குச் சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள ஒரு அமைதியான ஏரிக்கரையில் அவர் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த உள்ளூர் மக்களிடம் படகு சவாரி குறித்து சாதாரணமாகப் பேச்சு கொடுத்துள்ளார்.

படகு சவாரிக்கு 80 ரூபாய் கட்டணம் என்று அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர். அப்போது பேச்சுவாக்கில் அவர் எங்கிருந்து வருகிறார் என்று அவர்கள் கேட்க, தான் “இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து வருகிறேன்” என்று அந்த இளைஞர்

 

View this post on Instagram

 

A post shared by Rizwansidravlog (@rizwansidravlog)

புன்னகையுடன் பதிலளித்தார்.

அவர் இந்தியர் என்று தெரிந்தவுடன், அங்கிருந்த பாகிஸ்தான் மக்களின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. தங்கள் உறவினர்கள் இந்தியாவில் வசிப்பது குறித்தும், எல்லைக்கு அருகில் உள்ள தங்கள் கிராமங்கள் குறித்தும் நெகிழ்ச்சியுடன் அவர்கள் உரையாடினர்.

தொடர்ந்து, படகு ஓட்டுபவர் “இந்திய ரூபாய் நோட்டு எப்படி இருக்கும்?” என்று கேட்க, அந்த வாலிபர் தனது பாக்கெட்டில் இருந்த 100 ரூபாய் நோட்டை எடுத்துக்காட்டினார். இந்திய ரூபாய் நோட்டை முதன்முறையாக நேரில் பார்த்த அந்த மக்கள் பெரும் ஆச்சரியமும் ஆர்வமும் அடைந்தனர்.

அந்த இளைஞரின் எளிமையால் கவரப்பட்ட படகு ஓட்டுபவர், அங்கிருந்தவர்களிடம் “இவர் நம் நாட்டு விருந்தினர், இந்தியாவிலிருந்து வந்திருக்கிறார்” என்று பெருமையுடன் கூறினார். மேலும், அந்த இந்திய இளைஞரிடம் படகு சவாரிக்குக் கட்டணம் வாங்க மறுத்து, அன்பளிப்பாக இலவசமாக அழைத்துச் சென்றுள்ளார்.

பாகிஸ்தான் மக்களின் இந்த உபசரிப்பை ஏற்றுக்கொண்ட அந்த இளைஞர், அவர்களது அன்பிற்கு மதிப்பளித்து படகு சவாரியை மகிழ்ச்சியுடன் அனுபவித்தார். மேலும் ‘Rizwansidravlog’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். “எல்லைகள் பிரித்தாலும் இதயங்கள் இணையவே செய்கின்றன” என நெட்டிசன்கள் இந்த வீடியோவிற்கு இதயக் குறியீடுகளுடன் (Heart Emojis) தங்கள் அன்பைப் பொழிந்து வருகின்றனர்.