கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் காமராஜர் பணியாற்றியுள்ளார். இவர் தனது இரண்டு மகள்களும் ஈஷா யோகா மையத்தில் உள்ளனர். அவர்களை மீட்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணையில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஈஷா யோகா மையத்தின் அனைத்து வழக்குகளையும் அக்டோபர் 4ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டனர். இதனை அடுத்து காவல்துறை கண்காணிப்பாளர் கே. கார்த்திகேயன் தலைமையில் ஆறு குழுக்களாக காவல்துறையினர் பிரிந்து ஈஷா யோகா மையத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் ஈஷா யோகா மையத்தின் மூத்த வக்கீலான முகுல் ரோஹத்கி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஈஷா யோகா மையம் மதச்சார்பு தொடர்புடையது, மிகவும் தீவிரமான வழக்கு, ஈஷா யோகாவின் நிறுவனர் சத்குரு மிகவும் மதிப்பிற்குரியவர், பல நாட்டில் உள்ள மக்கள் அவரை வழிகாட்டியாக கொண்டுள்ளனர். மேலும் ஈஷா யோகா மனிதர்களின் உள் அமைதியை காக்கும் யோகா பயிற்சிகளை வழங்கக்கூடிய இடமாக திகழ்கிறது என வாதிட்டார். இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் கூறியதாவது, போக்சோ சட்டத்தின் கீழ் ஈஷா மையத்தின் மருத்துவர் கைது செய்தது பற்றியும், ஈஷா யோகா மையத்தில் பழங்குடி மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்தது குறித்து கேள்வி கேட்டனர்.
மேலும் பேராசிரியரின் இரண்டு மகள்களுடன் நீதிபதிகள் ஆன்லைனில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஈஷா யோகாவின் மூத்த வக்கீல் முகுல் கூறியதாவது, ஈஷா மையத்தில் வேலை செய்த மருத்துவர் அங்கே தங்கி இருப்பவர் அல்ல. மேலும் பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்ட துன்புறுத்தலுக்கும் ஈஷா மையத்துக்கும் சம்பந்தம் அல்ல என விளக்கம் அளித்தார். இதனைத் தொடர்ந்து பேராசிரியரின் இரண்டு மகள்களும் தங்கள் விருப்பப்படியே ஈஷா மையத்தில் தங்குவதாகவும்,தாங்கள் சுதந்திரமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர். எனவே உச்ச நீதிமன்றம் ஈஷா யோகாவின் மீது இனிமேல் விசாரணை மேற்கொள்ள வேண்டாம் இதுவரை விசாரணை செய்த ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டது.