உலகப் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரையில், திடீரென ஆபத்தான “ஜெல்லி மீன்கள்” (Jellyfish) அதிக அளவில் கரை ஒதுங்கி வருவது அங்கு புனித நீராட வரும் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த வகை ஜெல்லி மீன்கள் கடலில் நீராடும் பக்தர்களின் உடலில் பட்டால், கடுமையான தோல் எரிச்சல், வீக்கம் மற்றும் அரிப்பு போன்ற உபாதைகள் ஏற்படும் என்பதால் கோவில் நிர்வாகமும் காவல்துறையும் பக்தர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடலில் குளிக்கும் போது ஜெல்லி மீன்கள் தென்பட்டாலோ அல்லது உடலில் ஏதேனும் அசௌகரியம் தெரிந்தாலோ பக்தர்கள் உடனடியாகக் கரையேற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஜூன் மாத சீசன் மற்றும் விசேஷ நாட்களை முன்னிட்டுப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கடலில் நீராடி வரும் வேளையில், இந்த திடீர் விபரீதம் ஒட்டுமொத்த ஆன்மீகப் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.