சென்னையில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” மூலமாக தற்போதைய தவெக ஆட்சிக்காலத்தில் முதல் அதிகாரப்பூர்வ வழக்கு அதிரடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை அயனாவரம் பகுதியில், வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தவறான எண்ணத்தோடு அத்துமீறி நடக்க முயன்ற சுரேஷ் என்ற நபரை, அயனாவரம் அனைத்து மகளிர் போலீசார் ‘சிங்கப்பெண்’ படையின் வழிகாட்டுதலின்படி கையும் களவுமாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
முன்னதாக, இதே வழக்கைச் சுட்டிக்காட்டித்தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிங்கப்பெண் படையின் முதல் வழக்கே ஆளுங்கட்சியான தவெகவின் எம்.எல்.ஏ மற்றும் நிர்வாகிக்கு எதிராகப் பாய்ந்துள்ளதாகக் கூறி முதல்வர் விஜய்க்கு காரசாரமான சவால் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் களமிறங்கியுள்ள இந்தச் சிறப்புப் படையினரின் முதல் கைது நடவடிக்கை, தற்போது சென்னை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
