மக்களை ஏமாற்றி நம்பவைக்கத் தெரிந்தவர்களே சிறந்த தலைவர்களாக வெற்றி பெறுகிறார்கள் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அதிர்ச்சி தரும் கருத்தை வெளியிட்டார். ராஜஸ்தானின் நாக்பூரில் அகில பாரத மகானுபவ பரிஷத் நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது துறையில் உண்மையை வெளிப்படையாகப் பேசுவது யாருக்கும் பிடிப்பதில்லை என்று கூறினார்.

மக்களை ஏமாற்றத் தெரிந்தவர்கள் தான் அரசியலில் வெற்றி பெறுகிறார்கள் என்று கூறிய கட்கரி, ஒவ்வொருவருக்கும் அவரவர் நோக்கங்கள் இருப்பதாகவும், ஆனால் உண்மையை மறைத்து நம்பவைப்பவர்களே முன்னிலை பெறுவதாகவும் தெரிவித்தார்.

இருப்பினும், உண்மையே இறுதியில் வெல்லும் என்று பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய கட்கரி, குறுக்கு வழிகள் மூலம் வெற்றி பெற முடியும் என்றாலும், அவை இறுதியில் தோல்வியையே தரும் என்றார்.

“ரெட் சிக்னலை மீறி செல்லலாம், ஆனால் குறுக்கு வழிகள் பயணத்தை முடக்கிவிடும்” என்று தத்துவ ஞானியின் கூற்றை மேற்கோள் காட்டிய அவர், உண்மையையும் அர்ப்பணிப்பையும் மதித்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

உண்மையை மறைத்து மக்களை ஏமாற்றுவது தற்காலிக வெற்றியைத் தரலாம் என்றாலும், நீண்டகாலத்தில் உண்மையே வெல்லும் என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.