சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் வீடியோவில், மிருகங்களை சும்மா தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு. வீடியோவில், ஒரு சாந்தமாக இருக்கிற ஒட்டகத்தை சில இளைஞர்கள் தொந்தரவு செய்கிறார்கள். இதனால் கடுப்பான ஒட்டகம் என்ன செய்தது தெரியுமா?.

 

 

View this post on Instagram

 

A post shared by Krishnansh Arora (@krishnansh_arora)

அதாவது ஒட்டகம் ஒரு மரத்தில் உள்ள பச்சை இலைகளை அமைதியாகத் தின்றுக்கொண்டிருந்த நேரத்தில், ஒரு இளைஞன் அதன் முகத்துக்கு அருகில் ஒரு கிளையை எடுத்துச்சென்று தொந்தரவு செய்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த ஓட்டகம் உடனே எகிறி குதித்து அந்த இளைஞர்களை துரத்தியது. இதனால் பயந்து போன அந்த இளைஞர்கள் அங்கிருந்து வேகமாக ஓடி தப்பிச்சென்றனர்.

இதனை அங்கிருந்த இளைஞர்களில் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.