தலைநகர் டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் சார்பில் ஏராளமான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் ஏராளமான விவசாயிகளும் டெல்லி நோக்கி சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை முதல் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பெரும்பதற்றம் நிலவும் நிலையில் போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

 

இந்த நிலையில் பிரதமர் மோடியின் இல்லம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்ட நிலையில் சுமார் இரண்டு மணி நேரம் வரை அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் தற்போது ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ்  மற்றும் பிரியங்கா காந்தி உட்பட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர். நீட் முறைகேடுக்கு பிரதமர் மோடி மற்றும் தர்மேந்திர பிரதான் ஆகியோர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில்  தற்போது காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.