குடும்பச் சொந்தங்களுக்குச் சொந்தமான பத்திரிகையில் தங்களுக்கு ஆதரவாக வெளியான தலையங்கத்தை ஸ்டாலின் மற்றும் திமுகவினர் உற்சாகமாகக் கொண்டாடி வருவதாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. டீக்கடைகள், சலூன்கள் மற்றும் சைக்கிள் கடைகள் போன்ற பாமர மக்கள் புழங்கும் இடங்களில் பரவலாகப் படிக்கப்படும் பாரம்பரியப் பத்திரிகையான ‘தினத்தந்தியில்’ தவெக ஆட்சி குறித்து வெளியான தலையங்கங்களை ஸ்டாலின் கண்டும் காணாமல் நடிப்பது ஏன் என்ற கேள்வி பரவலாக முன்வைக்கப்படுகிறது.
தவெகவின் நேர்மையான மற்றும் லஞ்ச ஊழலற்ற நிர்வாகத்தால் ஊழலின் ஊற்றுக்கண்கள் அடைக்கப்பட்டுவிட்டதாகவும், அரசு அலுவலகங்களில் நேர்மை மணம் வீசத் தொடங்கியுள்ளதாகவும் தினத்தந்தி தலையங்கம் சுட்டிக்காட்டியுள்ளதை திமுக தரப்பு வசதியாக மறைப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தங்கள் குடும்ப உறவினர் பத்திரிகையில் எழுதப்பட்டதைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார், ஸ்டாலின் சார். அதுவும் அவருக்குப் புரியும் வகையில் எழுதப்பட்டது என்பதாலோ என்னவோ, இன்புற்றுக் கோடிட்டுக் காட்டுகிறார். குதூகலிக்கிறார். அதற்கு ஆதரவாகக் கொடியும் பிடிக்கிறார்.
வெகுஜன மக்கள்…
— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) July 21, 2026
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதில் தமிழக வெற்றிக் கழகம் எந்தவித சமரசமும் செய்யாமல் தனது உறுதியான நிலைப்பாட்டில் குறியாக உள்ளது என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுக்கு எவ்வித அதிகாரமும் இல்லாத காலத்தில் வெறும் ஓட்டு அரசியலுக்காக நீட்டை ஒழிப்போம் என்று பொய் கூறி மக்களை ஏமாற்றியது யார் என்பது தமிழர்களுக்கு நன்கு வெளிச்சம் போட்டுத் தெரியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசில் அதிகாரப் பதவிகளுக்காகவும் இலாக்காக்களுக்காகவும் பேரம் பேசிய திமுக, நீட் விவகாரத்தில் ஆரம்பத்தில் எந்தவித தீவிர நடவடிக்கையும் எடுக்காமல் நாடகமாடியதுடன், தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும்போது மட்டும் நீலிக்கண்ணீர் வடிப்பதையும் மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இளைஞர்கள் நடத்தி வரும் அஹிம்சை வழிப் போராட்டங்களில் தங்களது சொந்த ஸ்டிக்கரை ஒட்டிக்கொள்ளும் தகிடுதத்த வேலைகளிலும் விளம்பர அரசியலிலும் திமுக தீவிரமாக ஈடுபட்டு வருவதாக சாடப்பட்டுள்ளது. அரசியல் ரீதியான போதாமைகளாலும் பொறாமையாலும் சினிமா வெளியீடுகளையும் மக்கள் போராட்டங்களையும் தொடர்புபடுத்தி திமுகவினர் பேசி வருவதை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்று விமர்சிக்கப்பட்டுள்ளது.
அதிகாரம் மற்றும் பதவிகளை இழந்த பிறகு புனித வேடம் போடுவதில் கைதேர்ந்த திமுக, தனது சொந்த முகமூடியைத் தானே கழற்றி அம்பலப்பட்டு நிற்பது தொடர்கதைதான் என்றும் அரசியல் களத்தில் கடுமையான கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
