SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  இன்றைக்கு பலபேர் பேசுகிறார்கள். உங்களுக்கு யார் பிரதமர்?  நீங்கள் எப்படி பாராளுமன்றத்தில் மக்களை சந்தித்து ஓட்டு கேட்பீட்கள்…   ஒடிசாவில் நவீன் பட்நாயக் இருக்கின்றார். அவர் கடந்த தேர்தலில் பிரைம் மினிஸ்டர் முன்னிறுத்தியா ஓட்டு கேட்டு ஜெயித்தார்.  இல்லையே….  ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி பிரைம் மினிஸ்டர் முன்னிறுத்தியா  ஓட்டு கேட்டார்.

யார் பிரைம் மினிஸ்டர் ? என்று சொல்லியா ஓட்டு கேட்டார், இல்லையே….  கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி அங்கே பிரைம் மினிஸ்டர் யார் என்று தெரிவிக்கப்பட்டா  வாக்குகளை கேட்டு,  வெற்றி பெற்றார்கள்.  இல்லையே….  ஆக மக்களுக்கு வேண்டியது நன்மை. ஆக அனைத்திந்திய முன்னேற்றக் கழகம் பொறுத்தவரையிலும் தமிழ்நாட்டில் இருக்கின்ற  சிறுபான்மை மக்களை காக்க வேண்டும். அவர்களுக்கு  எவ்வளவு இன்னல் ஏற்பட்டாலும்,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும்.

தமிழகத்தில் காவேரி நதிநீர் பிரச்சினை வந்தது. அந்த காவிரி நதி நீர் பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மத்திய அரசு காலம் தாழ்த்தியதை கண்டித்து….. இங்கு கூட  பல பேர் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினராக அமர்ந்திருக்கிறார்கள். அந்த காலகட்டத்தில் இருந்த பொழுது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறி,  நாடாளுமன்றம் 22 நாட்களும் முடக்கப்பட்டது.

இந்திய நாட்டினுடைய நாடாளுமன்றம் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். காவிரி மேலாண்மை குழு அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நடக்க வேண்டும் என்று 22 நாட்கள் தொடர்ந்து நாங்கள் முடக்கினோம் என தெரிவித்தார்.