“தேவை மனிதனை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது!” என்பதற்குச் சான்றாக, ஒரு மாற்றுத்திறனாளி வயலில் நெல் அறுவடை செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கைகளோ, கால்களோ இல்லாத ஒருவர், கடும் உழைப்பைச் செலுத்த வேண்டிய நெல் அறுவடை போன்ற கடினமான வேலையைச் செய்வது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
And you still think life’s unfair ? This Indian farmer defines strength 💪🇮🇳🌾 pic.twitter.com/F621YT6kdf
— Vishal (@VishalMalvi_) November 11, 2025
இந்த நெகிழ்ச்சியான வீடியோ, மனிதனின் மன உறுதியையும், தன்னம்பிக்கையையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. அந்த வைரல் வீடியோவில், கைகால்கள் இல்லாத அந்த மாற்றுத்திறனாளி, தனது வாயில் அரிவாளைப் பிடித்துக்கொண்டு, பயிர்களை அறுவடை செய்வதைக் காண முடிகிறது.
சவாலான சூழ்நிலையிலும் அவர் தன்னுடைய முயற்சியைத் தளரவிடாமல் உழைக்கும் விதம், பலரின் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த பலரும், “உறுதியான மனமும், தன்னம்பிக்கையும் இருந்தால் எதையும் சாதிக்கலாம்” என்று அவருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
