பிரசவத்தின் போது தாய் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது சடலத்தின் அருகில் பிறந்த குழந்தை கதறி அழும் நெஞ்சை உருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் பெண்மணி மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்ட போதோ அல்லது பிரசவத்தின் போதோ உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த வீடியோவில், உறவினர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அழுதுகொண்டிருக்க, பிரசவத்தில் தாய் உயிரிழந்த துயரம் தாங்காமல், அவருக்கு அருகில் பிறந்த பச்சிளங்குழந்தை உரத்த குரலில் தொடர்ந்து அழுது கொண்டிருக்கிறது.
क्या अभी भी आपको अपना दुख ज्यादा लग रहा है ?? pic.twitter.com/n5AKeHsNON
— Abhishek Rao (@love_donor_abhi) November 9, 2025
தாய், சேய்க்கான ஒரு தனிப்பட்ட பிணைப்பைக் காட்டுவது போல இருந்த இந்தக் காட்சி, பல இணையவாசிகளை உலுக்கியது. தாயின் சடலத்தைக் கண்டதால், குழந்தை இப்படிப் அழுகிறது என்று நம்பும் மக்கள், அந்தக் குழந்தையின் எதிர்காலம் குறித்துக் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இந்தப் பரிதாபகரமான சம்பவம் எங்கு நடந்தது என்பது குறித்த சரியான தகவல் இல்லை என்றாலும், பலரும் தங்கள் வருத்தத்தையும், இரங்கலையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
