சமூக வலைதளங்களில் சில நேரங்களில் கல் நெஞ்சையும் கரைய வைக்கும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் கேமராவில் பதிவாகி விடுகின்றன. அந்த வகையில், தனது மனைவி கள்ளக்காதலனுடன் ஓடிவிட்ட பிறகு, இரண்டு பிஞ்சு குழந்தைகளை கவனித்துக் கொள்ள முடியாமல் தவிக்கும் ஒரு தந்தையின் ஏழ்மையையும், இயலாமையையும் காட்டும் நெஞ்சை உலுக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. நாள் முழுவதும் உழைத்துவிட்டு வீட்டிற்குத் திரும்பிய அந்த தந்தை, தனது பச்சிளம் பெண் குழந்தை பசியால் அழுது கொண்டிருப்பதைக் கண்டுள்ளார். வீடு முழுவதும் தேடியும் மனைவி இல்லாததால், அவள் வேறொரு நபருடன் ஓடிவிட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாகக் குழந்தையின் பசியைப் போக்க அருகில் உள்ள மெடிக்கல் ஷாப்பிற்குச் சென்று ‘லாக்டோஜன்’ (Lactogen) பால் பவுடர் பாக்கெட்டை வாங்கியுள்ளார்.

எக்ஸ் (X) தளத்தில் ‘Krishnan Gaur’ என்ற கணக்கில் ஜூன் 25, 2026 அன்று பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ, இதுவரை 4.49 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று நெட்டிசன்களைக் கலங்க வைத்துள்ளது. அந்த வீடியோவில், பால் பவுடர் பாக்கெட்டை கையில் வைத்தபடி மெடிக்கல் ஷாப்பில் இருப்பவரிடம், “தம்பி, இதை என் மகளுக்கு எப்படி தயாரித்துக் கொடுக்க வேண்டும்? அவளுடைய அம்மாவுக்குத்தான் இதைச் செய்யத் தெரியும்” என்று கூறி, “அவள் வேறொரு ஆளுடன் ஓடிவிட்டாள்” எனத் தனது கண்களில் கண்ணீருடன் அந்த தந்தை பேசும் காட்சிகள் பார்ப்போரின் இதயத்தை நொறுங்கச் செய்கிறது. இந்த சம்பவம் எங்கு, எப்போது நடந்தது என்ற அதிகாரப்பூர்வ விவரங்கள் இல்லை என்றாலும், பெற்ற பிள்ளைகளைத் தவிக்கவிட்டுச் சென்ற அந்த தாயின் செயலுக்கு எதிராக நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களையும், அந்த தந்தைக்குத் தங்களது ஆறுதல்களையும் கமெண்ட்டுகளில் தெரிவித்து வருகின்றனர்