தெருவில் படுத்திருந்த ஒரு வீடற்றப் பெண்ணை நோக்கி, ஒரு அன்னிய நபர் நெருங்கி வந்தபோது, அந்தப் பெண்ணின் செல்லப் பிராணியான நாய் தன்னுடைய எஜமானியைப் பாதுகாக்கக் குரைத்துக்கொண்டு பாய்ந்த நெகிழ்ச்சியான மற்றும் ஆச்சரியமூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ பார்ப்பவர்கள் மத்தியில் மிகுந்த பாசத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வீடில்லாத ஒருவர் தன்னுடைய உடைமைகள் மற்றும் உயிரைப் பாதுகாப்பதற்கு நாயை எந்த அளவிற்கு நம்பியிருக்க முடியும் என்பதை இந்தச் சம்பவம் காட்டுகிறது.
View this post on Instagram
வீடியோவில், நடுரோட்டில் படுத்திருந்த அந்தப் பெண்ணின் அருகே, ஒரு நபர் மெதுவாக நடந்து வருகிறார். அவரைப் பார்த்தவுடனே விசுவாசமுள்ள அந்த நாய் சட்டென்று எழுந்து, கத்துவதன் மூலம் அந்த அன்னிய நபரை அங்கிருந்து செல்லுமாறு எச்சரிக்கிறது.
அந்த நபர் அருகில் வராமல் தடுத்து, தனது எஜமானிக்கு பாதுகாவலனாக நாய் செயல்பட்டது, பல நெட்டிசன்களை உருக வைத்துள்ளது. “இந்த உலகில் உள்ள விலங்குகள் மட்டுமே உண்மையான பாசத்தையும், நம்பிக்கையையும் கொண்டுள்ளன” என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
